தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது வரையிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் இவரது இடத்தை பிடிக்க பல தமிழ் சினிமா நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக இவரும் தற்போது நடித்து வருவதால் அத்தகைய இடத்தை பிடிக்க முடியாமல் வருகின்றனர் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள்.
ரஜினி அவர்கள் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமா உலகில் நடித்துக் கொண்டு வருகிறார் அப்படி இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் அண்ணாத்த இத்திரைப்படத்தில் பல நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர்.இந்த நிலையில் ரஜினியின் பேமஸான வசனம் ஒன்று சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது அது என்னவென்று தற்போது பார்ப்போம்.
ரஜினியின் வசனத்தை ஒவ்வொன்றாக உற்றுக் கவனிக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம் அப்படி போடா ஆண்டவனே நம்ப பக்கம் என்ற வசனம் மிகப் பெரிய அளவில் ஃபமஸ் அடைந்தது இந்த வசனத்தை ரஜினிக்கு கூறியவர் தெரியுமா என்று தான் இப்பொழுது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருந்தது அது வேறு யாருமல்ல அது ரமேஷ்கண்ணா தான்.
தமிழ் சினிமா உலகில் காமெடியனாக வலம் வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் பல இயக்குனர்களுக்கு துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த வசனத்தை கூறியுள்ளார் அப்படி இயக்குனர் கே வி எஸ் ரவிக்குமார் அவருக்கு துணை இயக்குனராக பணியாற்றிய பொழுது இத்தகைய வசனத்தை அவர் கூறியுள்ளார் அதன்பிறகு ரஜினி படையப்பா படத்தில் இந்த வசனத்தை கூறினார்.
ரமேஷ் கண்ணா சினிமாத்துறை இவ்வுலகில் இயக்குனராகவும் துணை இயக்குனராகவும் காமெடியனாகவும் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ரஜினிக்கு இந்த வசனத்தை கொடுத்தது தான் சினிமா உலகில் செய்த மிகப்பெரிய பாக்கியம் எனவும் அவர் கூறினார்.