விஜய் டிவி பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் கலைஞர் பேசிவுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலங்களாக மக்களுக்கு பொழுது போகும் வகையில் உருவாகி வரும் சின்னத்திரை சீரியல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தொடர்ந்து தங்களுடைய சிறப்பான கதை அம்சம் உள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல வரவேற்பு இருவரும் நிலையில் சீரியலுக்கு மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்து வருகிறது. அப்படி பொதுவாக டிவி சீரியல்களில் நடித்து வரும் பிரபலங்கள் தங்களது சொந்தக்காரர்களில் பேச மாட்டார்கள் அவர்களுக்கு வேறு ஒருவர் தான் குரல் கொடுப்பார்கள்.
ஏனென்றால் அந்த சீரியலில் நடிப்பவர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் அப்படிப்பட்ட அவர்களுக்கு பெரிதாக தமிழ் பேச தெரியாது எனவே பல சீரியல்களில் நடித்து வருவதால் அவர்களுக்கு நேரம் இருக்காது இந்நிலையில் விஜய் டிவியில் மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இவர் இந்த சீரியல் ஹீரோயின்களுக்கு குரல் கொடுப்பவரின் பெயர் மீனா ரோஷினி, பிரதீப். சமீபத்தில் விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் டப்பிங் கலைஞர்களுக்கான விருதினை மீனா ரோஷினி, பிரதீப் ஆகியோர்களுக்கு கொடுத்து கௌரவ படுத்திருந்தார்கள். அப்பொழுது அவர் மீனா ரோஷினி நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா, பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி, ஈரமான ரோஜாவே 2 சீரியல் பிரியா, பொன்னி சீரியல் ஷமிதா, மௌனராகம் சீரியல் காதாம்பரிக்கு குரல் கொடுத்து இருக்கேன் என பேசியிருந்தார்.
இவரை அடுத்து டப்பிங் கலைஞர் பிரதீப் நான் காற்றுக்கென்ன என்ன வேலி சீரியல் சூர்யா, முத்தழகு பூமிநாதன், பாக்யலட்சுமி சீரியல் எழில், ராஜா ராணி சரவணன், ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஜீவா, மகாநதி சீரியலில் கவின், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அர்ஜுன், வேலைக்காரன் சீரியலில் சபரி, நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் கார்த்தி, கண்ணே கலைமானே சீரியலில் ராம் ஆகியோர்களுக்கு டப்பிங் கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு ஒரே ஒருவர் இத்தனை குரல் கொடுத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த வீடியோ..