பருத்திவீரன் படத்தை தூக்கி நிப்பாட்டியது இவர்தான்..! கார்த்தியிடம் நாசுக்காக சொன்ன இயக்குனர் அமீர்.

paruthiveeran
paruthiveeran

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் இப்பொழுது வெளியான விருமன் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது அடுத்ததாக பொன்னியின் செல்வன் அதனை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்திரன் இயக்கத்தில் சர்தார் போன்ற படங்களில் கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகுவதால் கார்த்தியின் மார்க்கெட் அதிகரிக்கும் என தெரிய வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தன்னுடைய முதல் படமான பருத்திவீரன் படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் கார்த்தி. அமெரிக்காவிலிருந்து வந்த உடனேயே சினிமாவில் உதவி இயக்குனராக களம் இறங்கினேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் அப்பா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் அறிவுரை காரணமாக பருத்திவீரன் படத்தில் நடிக்க முடிவெடுத்தேன் மணிரத்தினம் அவர்களிடம் ஆலோசனை கேட்ட பின்னரே நடிகனாக மாறினேனென கூறினார். கதாநாயகன் அமெரிக்காவில் இருந்து வருகிறார் என்றால் ஹீரோயின் பெங்களூருவில் வளர்ந்தவர்..

இருவரும் மதுரைக்கான டயலாக் மற்றும் பாடி லாங்குவேஜ் போன்றவை கொண்டு வர இயக்குனருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்ததாம் எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக அட்வைஸ் கொடுத்து அந்த கதாபாத்திரமாக தேற்றி விட்டனர். பருத்திவீரன் படத்தில்  முதன்முதலாக எடுக்கப்பட்ட காட்சி பேசாமல் என் கூட படுத்து புள்ளைய குடுத்திடு என்ற வசனம் பேசும் காட்சி தான் அந்த காட்சி எடுக்கவே ஏழெட்டு டேக்குகளுக்கு மேல் ஆச்சி அன்று இரவு தங்கும் விடுதிக்கு இயக்குனர் கார்த்தியையும், பிரியாமணியையும் அழைத்து பேசி உள்ளார்.

அமீர் அதில் அவர் சொன்னது கதைக்கு ஏற்றார் போல நன்கு நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் பின் பிரியாமணியை வெளியே போக சொல்லிவிட்டு கார்த்தியிடம் அந்தப் பெண் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கிறார். கொஞ்சம் விட்டால் கூட உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவாள் உங்களது கதாபாத்திரத்தை டம்மியாகி விடுவாள் பார்த்துக் கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்ய கார்த்தியோ பயத்தில் மிரண்டு போயிட்டாராம் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் பிரியாமணி உடன் நடிக்கும் பொழுது பயந்து கொண்டு நடித்து உள்ளார்.

பிரியாமணியும் ஒரு பக்கம் தனது முழு திறமையையும் வெளிகாட்டி மிரட்டினார் இந்த படத்தில்   பிரியாமணிக்கு அப்பாவாக பொன்வண்ணன் நடித்திருப்பார் ஒரு காட்சியில் பொன்வண்ணன் பிரியாமணியை குடையால் அடிப்பார். அவருக்கு பொய்யாக நடிக்க தெரியாததால் உண்மையாகவே ஏழெட்டு டேக்குகளில் ஏழு குடைகள் உடைந்தாம்.  பிரியாமணி அழுது கொண்டே அதில் நடித்ததாகவும் சொல்லப்படுகிறது அதனால் தான் அவருக்கு தேசிய விருதும் கிடைத்ததாக கார்த்தி கூறினார்.