பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெறுவதற்கு தகுதியானவர் இவர்தான்.! அப்ப விக்ரமன் கிடையாதா.?

bigg-boss-6
bigg-boss-6

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்துள்ள நிலையில் தொடர்ந்து நாள்தோறும் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது அதோடு மட்டுமல்லாமல் முந்தைய சீசன்களை விட இந்த சீசன் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அடுத்தடுத்து டம்மியாக விளையாடி வந்த போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

மேலும் இதனை அடுத்து வாரம் வாரம் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையான டாஸ்க்களை விளையாடு வரும் நிலையில் தங்களுடைய சிறந்த போட்டித் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் இவ்வாறு இந்த சீசன் தான் முந்தைய சீசன்களை விட ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தாலும் முந்தைய சீசன்களைப் போல இந்த சீசனில் இருப்பவர்கள் உடல் உழைப்பை பெரிதாக கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

எனவே இதற்கு மேல்லாவது பிக்பாஸ் கடின உழைப்பை செலுத்தும் வகையில் டாஸ்க்குகள் நடைபெறும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஒரே போட்டியாளர் தான் சிவின். ஆரம்ப கட்டத்தில் இருந்து தன்னுடைய செயலால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இந்நிலையில் இந்த சீசனில் சரியாக புரிந்து கொண்டு விளையாடி வரும் ஒரே போட்டியாளர் என்றால் அது ஷிவின் தான் என கமலை ஒரு முறை பாராட்டி இருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையிலும் ஒரு வாரம் கூட நாமினேஷனில் சிக்கவில்லை. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் யார் வெற்றியாளராக இருக்க முடியும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது அதாவது எதிர்பாராத வாக்குவாதங்கள் செய்து தன்னுடைய மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக இருந்து வருபவர் தான் அசிம்.

இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வருகிறதோ அதேபோல் ஷிவினுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே இவர்கள் இருவரில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த சீசனில் அனைவரிடமும் சண்டை போட்டு வரும் அசிமை வீழ்த்த வேண்டும் என பல முயற்சி செய்து வரும் நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெறுவதற்கு அசிம் மற்றும் சிவில் இருவருக்கும் தான் தகுதி இருப்பதாக கருத்துக்கள் கூறிய வருகிறார்கள்.