சினிமாவை பொருத்தவரை நடிகைகள் பலர் வருவதும் உண்டு போவதும் உண்டு. ஆனால் சில நடிகைகள் மட்டுமே முதலில் நடித்துவிட்டு பிறகு நடிக்காமல் இருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமடைந்து இருப்பார்கள். அப்படி சிறிது காலம் நடித்துவிட்டு பிறகு நடிக்காமல் இருந்த நடிகைகள் லிஸ்ட்டில் நடிகை கௌதமி ஒருவர்.
இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் கௌதமி நடித்துள்ளார். இவர் தன்னுடைய வசீகர தோற்றத்தால் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார்.
சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கௌதமி ஒரு காலகட்டத்தில் திடீரென சினிமாவை விட்டு விலகினார் இவர் சுமார் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.
அதற்கான காரணம் என்ன என்பதை நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது உண்மையை கூறியுள்ளார். நடிகை கௌதமி 1998-ஆம் ஆண்டு சந்திப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்கள் திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட சந்தோஷமாக நிலைக்கவில்லை அடுத்த வருடமே இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டார்கள் பின்பு தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த இருவருக்கும் சுபலட்சுமி என்ற மகள் இருக்கிறார். தன்னுடைய திருமண முறிவுக்கு பிறகு கௌதமி தனியாக வாழ்ந்து வந்தார் அதன் பிறகு உலகநாயகன் கமலஹாசனுடன் பத்து வருடங்களாக லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.
கமலஹாசனுடன் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் படங்களில் நடிக்காமல் கமல் திரைப்படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சினிமாவில் இருந்து திடீரென விலகியதற்கு காரணம் என்ன என்பதை நீண்ட வருடங்களுக்கு பிறகு உண்மையை கூறியுள்ளார்.
அதாவது தன்னுடைய மகள் சுப்புலட்சுமி தான் சினிமாவில் நடிக்க முடியாததற்கு காரணம் என கூறியுள்ளார். அதாவது தனியாக தன்னுடைய மகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என்ற கவலையில் சினிமாவை விட்டு நீண்ட காலம் விலகி வேறு தொழில்களை செய்து வந்தார். கௌதமியின் இந்த நிலைமையை பார்த்த ரசிகர்கள் உச்சி கொட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.