நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன். தனது திரைப்பயனத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார்.
கடைசியாக இவர் நடித்த விக்ரம் திரைப்படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கமல் வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அவருடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் , ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், சமுத்திரகனி, தம்பி ராமையா, ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட் வெளிவந்த வண்ணமே இருக்கிறது.
இந்த படத்தை மக்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். இருந்தாலும் இந்த படத்தில் கமலுக்கு வில்லனாக யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது நடிகர் கமலுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா அவர்கள் தான் நடித்துள்ளாராம் அவருடைய காட்சிகள் முன்பே படமாக்கப்பட்டு விட்டன என கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் எஸ் ஜே சூர்யா சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.