தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நடிகர்கள் தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர், விக்ரம், ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தன்னுடைய வில்லன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த திரைப்படமான விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து தியேட்டரை தெரிவிக்கப்பட்டு இருந்தார் சூர்யா.
அதேபோல தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் விஷாலை அனுகியுள்ளார் ஆனால் விஷால் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகியதால் தளபதி 67 திரைப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது அவருக்கு பதிலாக அர்ஜுன் அவர்கள் நடிக்க இருக்கிறார். அர்ஜுன் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தொடர்ந்து தற்போது தனுஷும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இணையதளத்தில் தகவல் தீயாய் பரவி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 62 திரைப்படத்தில் தனுஷ் அவர்களை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமல்லாமல் தனுஷ் இதற்கு சம்மதம் தெரிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
தற்போது அஜித் அவர்கள் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிய நிலையில் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் துணிவு படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் அவர்கள் விக்னேஷ் சிவனுடன் இணை இருக்கிறார் இந்த திரைப்படத்தில் மற்ற நடிகர்களைப் போல தனுஷ் அவர்கள் வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.