“நானே வருவேன்” படம் மண்ணைக் கவ்வ முக்கிய காரணமே இவர் தானாம் – தனுஷ் எவ்வளவு கேட்காத அந்த நபர்.?

naane-varuven
naane-varuven

நடிகர் தனுஷ் இந்த வருடத்தில் மட்டுமே ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார் அதில் ஒரு சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன ஒரு சில படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது. அந்த வகையில் நானே வருவேன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெளிவந்து படம்  நானே வருவேன். கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார்.

கலைப்புலி தாணு படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் பொன்னியின் செல்வன் படத்தை எதிர்த்து மோதியதால் தான் இந்த படத்தின் வசூல் குறைந்ததாக பேசப்படுகிறது. நானே வருவேன் சோலோவாக வெளியாகி இருந்தால் போட்ட காசை விட நல்ல லாபத்தை பார்த்திருக்கும் என பலர் கூறி வருகின்றனர்.

அதற்கு அப்பொழுது தயாரிப்பாளர் தாணு பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக தான் நானே வருவன் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை என கூறினார். ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிகையாளரான அந்தணன் கூறியது.. நானே வருவேன் திரைப்படத்தை பொன்னியின் செல்வன் படத்துடன் ரீலீஸ் செய்ய வேண்டாம்..

பொன்னியின் செல்வன் உடன் நம் படம் மோத வேண்டாம் என தனுஷ் கூறினாராம் இதற்கு தாணு சொன்ன பதில்.. பொன்னியின் செல்வன் சரியில்லை என்றால் மொத்த கூட்டமும் நானே வருவேன் படத்திற்கு தான் வருவார்கள்  என்று கூறிய அந்த திரைப்படத்தை வெளியிட்டார். ஆனால் அங்கு நடந்ததே வேற மொத்தமும் உல்டாவாக மாறிவிட்டது இதனை அந்தணன் பேட்டியில் கூறினார்.