Rajini : தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் ஹீரோவாக வருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று இதுவரை 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி நடித்துள்ளார். திரையுலகில் வெற்றி நடிகராக ஓடும் ரஜினி.
2௦௦5 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளிவந்து. படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்சன், காமெடி கலந்த இருந்ததால் ரசிகர்கள் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 800 நாட்களுக்கு மேல் ஓடி 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.
உடனே இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர் ஆனால் பல வருடம் கழித்து இப்பொழுதுதான் படம் உருவாகி உள்ளது. சந்திரமுகி 2 படத்தில் ரஜினி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது அவருக்கு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் கேட்பது சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் ஏன் ரஜினி நடிக்கவில்லை என பி வாசு உடன் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் சொன்னது.. இரண்டாவது பாகத்திற்கான தூண்டுதலை முதன்முதலில் கொடுத்தது லதா ரஜினிகாந்த் தானாம்.. ஏன் சந்திரமுகியில் இருக்கும் வேட்டையன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து ஒரு படம் பண்ண கூடாதா என கேட்டார் லதா. அதன் பிறகு தான் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நுழைந்து ரஜினியிடம் காட்டி இருக்கிறார்.
அது சந்திரமுகி 2 இல்லை வேட்டையனாக மட்டும் இருந்ததாம் அப்பொழுது ரஜினி ஷங்கரின் ரோபோ படத்தில் படும் பிஸியாக இருந்ததனால் வாசு இடம் முதலில் கன்னடத்தில் இந்த படத்தை எடுத்து முடித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி ஆப்தமித்ரா என்ற தலைப்பில் வாசு கன்னடத்தில் எடுத்தார்.
படம் மெகா ஹிட் அடித்தது. மறுபடியும் ரஜினியிடம் வந்திருக்கிறார்.வாசு அப்பொழுது ஒரு வருடம் ஆகியும் ரோபோ படம் பண்ண முடியாமல் இருந்ததாம் அது ஒரு காரணமாக ரஜினி கூறினாராம் இன்னொரு காரணத்தை ரஜினியால் சொல்லவே முடியவில்லை.
அப்படியே அந்த படம் டிராப்பானது அதன் பிறகு குசேலன் படத்திற்காக பத்து நாள் கால் சீட் கொடுத்து இயக்கத்தில் நடிதார் ரஜினி ஆனால் அந்த படத்திற்கான விளம்பரம் அதிகமாகி விமர்சனம் கம்மியாகிவிட்டதாக ரஜினி மிகவும் வருந்தினாராம். விளம்பரத்திற்கு ஏற்ப படத்தில் அதிகமாக வந்திருந்தால் படம் நன்றாக ஓடி இருக்கும் என கூறி வருந்தினாராம்.