வலிமை படத்தின் ஹீரோயின் இவர்தான் அதிகாரபூர்வமாக அறிவித்த நேர்கொண்டபார்வை பிரபலம்.! இதோ வீடியோ!!

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். அஜித் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகள் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இதுபோன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்த வருகின்றன இந்த நிலையில்  ஹச். வினோத் அவருடன் வலிமை என்ற கைகோர்த்து உள்ளார் அஜித். இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் முடியும் தருவாயில் உள்ளது இதனை தொடர்ந்து அவர்கள் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இப்படத்தில் தல அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்

இப்படத்தில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாத நிலையை படக்குழுவினர் ரகசியமாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோல இப்படத்தின் ஹீரோயின் யார் என்று தெரியாத நிலை இருந்து வந்தது அனால் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் காலா படத்தில் இளவயது காதலியாக நடித்தவர்  நடிகை ஹுமா குரேஷி  . பாலிவூட் நடிகையாகிய  ஹுமா குரேஷி அவர்கள் அஜித்துக்கு ஜோடியாக  இப்படத்தில் நடிக்க உள்ளதாக பிக் பாஸ் அபிராமி மேலும் தெரிவித்தார். பிக் பாஸ் அபிராமி இதற்கு முன்பு நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.