இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளவர் ராஜமௌலி. இவர் 2001 ஆம் ஆண்டு ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் சை, சத்ரபதி, மகதீரா, விக்ரமற்குடு, நான் ஈ என்ற படங்களை இயக்கி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையத் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் 2017ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை எடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.இதனையடுத்து பாகுபலி இரண்டாம் பாகத்தையும் எடுத்தார் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இதையடுத்து ராஜமௌலி அவர்கள் சினிமாவின் முன்னணி நடிகரான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்ற பிரபலங்களை வைத்து (RRR) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படமும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சினிமா பிரபலங்கள் இந்த கட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர் அந்த வகையில் ராஜமௌலி அவர்கள் தனது அடுத்த படத்தை பற்றி வெளிப்படையாக கான்பிரண்ட்ஸ் காலில் பேசி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார்.ராஜமௌலி அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.