தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித் குமார். இவர் அண்மைக்காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நல்ல நல்ல படங்களை கொடுக்கிறார் அந்த படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. இப்போ இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க..
மீண்டும் ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாளம் நடிகை மஞ்சுவாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படம் ஒரு உண்மையை கதையை தழுவி உள்ளதால் இந்த படத்தை பெரிய அளவில் மக்கள் மன்றம் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இது எப்படி இருக்க மறுபக்கம் அஜித் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அந்த வகையில் அஜித் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்து பட்டையை கிளப்பிய திரைப்படம் சிட்டிசன் இந்த திரைப்படத்தை சரவணன் சுப்பையா இயக்கியிருந்தார்.
அஜித் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி இருந்தார். இந்த படம் அஜித் கேரியரில் மிகப்பெரிய ஒரு பெஸ்ட் படமாக பார்க்கப்பட்டது இப்பொழுதும் பல ரசிகர்களுக்கும் பிடித்த திரைப்படமாக இது இருக்கிறது ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது வேறு ஒருவராம். அந்த ஹீரோ வேறு யாரும் அல்ல கமல் தான்.
இயக்குனர் சரவண சுப்பையா அஜித் வாலி திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே இந்த படத்தின் ஓன் லைன் கதையை கமலுக்கு கூறினாராம் கமலக்கும் பிடித்து போயிருந்தாலும், அப்பொழுது அவர் ஹேராம் படத்தில் விறுவிறுப்பாக நடித்திருந்ததால் சிறிது காலமாகும் வெயிட் பண்ணுங்கள் என கூறினாராம் ஆனால் சரவணா சுப்பையா கடைசியாக அஜித்திடம் சிட்டிசன் கதையை சொல்ல அவருக்கு ரொம்ப பிடித்து போகவே அது படமாக உருவாகியதாம்.