விக்ரம் படத்தில் இடம்பெற்ற “ஏஜென்ட் டீனா” கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர்தானாம்.! சீரியல் நடிகை பேட்டி

vikram-movie-
vikram-movie-

இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிகப்பெரிய வசூலை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்த திரைப்படம் என்றால் அது விக்ரம் படம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், சென்டிமென்ட் கலந்து திரைப்படமாக இருந்தது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. விக்ரம் படம் வெளிவந்து அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது மேலும் தமிழை தாண்டி பல்வேறு இடங்களிலும்..

நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக விக்ரம் திரைப்படம் 450 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. இந்த படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது ஆனால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது வேறு ஒரு சீரியல் நடிகை தான் என கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் முக்கிய மற்றும் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை தேவிப்பிரியா. மேலும் இவர் பல்வேறு படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், நடித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியதாம் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் சொன்னது என்னவென்றால்..

devipriya
devipriya

விக்ரம் படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன்.. அப்பொழுது டீனா ரிப்போர்ட்டிங்  சார் என்னும் வசனத்தை பேசும்போது என்னுடைய குரல் வளம் சரியாக இல்லாத காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது இதனால் மிகுந்த வேதனை அடைந்தேன் என கூறினார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.