தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் ஆர்.ஜே பாலாஜி முதலில் இவர் காமெடியன்னாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு படிப்படியாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார் இப்பொழுது ஹீரோவாகவும், இயக்குனராகவும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
குறிப்பாக இயக்குனராக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இதுவரை அவர் மூக்குத்தி அம்மன், வீட்டில் விசேஷம் என விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களை எடுத்திருக்கிறார். அதே சமயம் அந்த படங்களிலும் அவர் நடித்துள்ளார். இப்படி ஓடிக்கொண்டு இருக்கும் ஆர். ஜே. பாலாஜி கேரியரில் மிக முக்கியமான படமாக..
இன்று வரையிலும் பார்க்கப்படுவது அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் தான் ஏனென்றால் இந்த படம் தான் அதிக வசூல் செய்ததோடு இயக்குனராக அவரை அறிமுகப்படுத்தியது. மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா, ஊர்வசி, இந்துஜா ரவிச்சந்திரன், மனோபாலா, யோகி பாபு, அபிநயா யாஷிகா ஆனந்த மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்திருக்க வேண்டியது வேறு ஒரு பிரபலம் தான்..அது குறித்து ஆர் ஜே பாலாஜி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. முதலில் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவை தான் அணுகினோம்.
அவருக்கு இந்த கதை பிடித்து ஓகே சொல்லி இருந்தார் ஆனால் நடிக்க 8 மாதம் அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது என கூறி அடுத்ததாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிடம் இந்த கதை கூற உடனே பிடித்து போக படமாக்கப்பட்டது என சொல்லி உள்ளார். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் படும் வைரலாகி வருகிறது.