தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் ஹீரோக்கள் ஏராளம் அந்த வகையில் நடிகர் அருண் விஜய் அண்மை காலமாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். இப்பொழுது கூட அவர் பல படங்களை கையில் வைத்திருக்கிறார் அந்த வகையில் சினம், பாக்ஸர், பார்டர், அக்னி சிறகுகள் என சொல்லிக் கொண்டே போகலாம்..
இவர் நடிப்பில் கடைசியாக வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் தடம் தான் இந்த படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தை மகிழ் திருமேனி தனக்கே உரிய ஸ்டைலில் படம் முழுக்க முழுக்க காதல், செண்டிமெண்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்து அற்புதமாக படம் உருவாகி இருந்தது படம் வெளிவந்து.
மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடியது இந்த படத்தில் அருண் விஜய் உடன் கைகோர்த்து வித்யா பிரதீப், தன்யா கோப், யோகி பாபு, ஸ்மருதி வெங்கட், சோனியா அகர்வால், விஜயன், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் தொடர்ந்து சூப்பராக ஓடியதன் விளைவாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த படம் இயக்குனருக்கும் சரி, நடிகர் அருண் விஜய்க்கும் சரி மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்தது. உண்மையில் தடம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அருண் விஜயை கிடையாதாம்.
இயக்குனர் மகிழ் திருமேனி முதலில் இந்த படத்தின் கதையை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின்காகத் தான் பார்த்து பார்த்து எழுதினாராம் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போகவே வேறு வழி இல்லாமல் அருண் விஜய்க்கு இந்த கதையை சொல்ல அவருக்கு பிடித்து போகவே இந்த படம் உருவானதாம்..