பரத் நடித்த காதல் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இவர் தானாம் – பல வருடம் கழித்து வெளிவரும் உண்மை தகவல்.

kadhal
kadhal

சினிமா உலகை பொறுத்தவரை சிறந்த படத்தை சில காரணங்களால் நடிகர்-நடிகைகள் தவற விட்டு பின் புலம்புவது வழக்கம். சிறந்த நடிகர்களுக்காக கதை எழுதப்பட்ட பின் அவர்கள் அந்த பட வாய்ப்பை விடுவதால் புதுமுக நடிகர்கள் நடித்து பிறகு கேரியரில் வெற்றிப் படமாக மாற்றி கொண்டு பயணிக்கின்றனர்.

அந்த வகையில் 2006ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படம் திரையரங்கில் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று அசத்தியது இந்த திரைப்படத்தில் நடிகர் பரத் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது போல ஹீரோயின் சந்தியாவும் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார்.

இந்த படத்தில் பரத், சந்தியா மற்றும் காதல் தண்டபாணி, சூரி, சுகுமார்,அருண் குமார் சுகன்யா, சரண்யா பொன்வணன் போன்றவர்கள் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அற்புதமாக நடித்து இருந்தனர்.

காதல் படத்தில் முதலில் பரத்துக்கு பதிலாக நடிக்க தேர்வு செய்து இருந்த பிரபல நடிகர் தனுஷ் தானாம். இயக்குனர் பாலாஜி சக்திவேல் தனுஷுக்கு தான் கதையை மனதில் வைத்து எழுதினர்.ஆனால் ஒரு சில காரணமாக இந்த படத்தில் தனுஷ் நடிக்காமல் போனதை அடுத்து பின் பரத் அடித்து அசத்தினாராம்.

பரத்துக்கு இந்த திரைப்படம் நல்லதொரு வரவேற்பு கொடுத்து அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் இந்த  திரைப்படத்தை மிஸ் செய்ததற்கு தனுஷ் வருத்தப்படாமல் சிறப்பான படங்களை அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து நடித்து  தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.