தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக விளங்குபவர் தல அஜித். இவர் சமீப காலமாக மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு நடித்த நேர்கொண்ட பார்வை, விசுவாசம் போன்ற படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.
இப்படத்தினை தொடர்ந்து தற்போது ஹச். வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் 70% பர்சன்டேஜ் முடிவடைந்த நிலையில் மீதி சூட்டிங் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரசிகர்களின் ஆரவார தொடங்கப்படும் என தல அஜித் அவர்கள் தெரிவித்துள்ளார்கள் இதற்க்கு படக்குழுவினரும் ஓகே சொல்லியுள்ளனர்.
இருப்பினும் அஜித் பற்றிய செய்திகள் தினந்தோறும் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர் அப்படிபட்ட செய்தி ஒன்றுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.அப்படி அஜித் நடித்து திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் வாலி இப்படத்தை எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சிம்ரன், ஜோதிகா ,விவேக் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் பலரும் நடித்திருந்தனர் இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.இப்படத்தின் கதையை முதலில் அஜித்திடம் சொல்லும் பொழுது மிக பொறுமையாகக் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் அவரை தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க கீர்த்தி ரெட்டி தேர்வு செய்தார்.
படத்தின் முதல் நாள் சூட்டிங் மெரினா கடற்கரையில் எடுக்கப்பட்டது முதல் சூட்டிங் எடுக்கப்பட்டது அந்த காட்சி ரசிக்கும்படி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு அடுத்ததாக தான் சிம்ரனை கமிட் செய்தனர்.கீர்த்தி ரெட்டி இதற்கு முன்பு நந்தினி, தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.