தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடைமொழியை பெற்றிருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படமும் மக்கள் மற்றும் ரசிகர்கள் வியக்கும் படி அமைந்துள்ளது. மேலும் அந்த படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பாராத அளவு வசூலை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து RC15 என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழில் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் புதிதாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால் தடம் பதித்துள்ளார். இவர் டாக்டர் படிப்பை முடித்துள்ளவர்.
தற்போது இவருக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளதால் அவரது அப்பாவிடம் அனுமதி வாங்கி முதல் படமாக கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சூர்யா தயாரிப்பில் உருவாக்கியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடந்தது.
அங்கு இயக்குனர் முத்தையா, யுவன் சங்கர் ராஜா, கார்த்தி, சூர்யா, இயக்குனர் ஷங்கர், அதிதி ஷங்கர், சூரி போன்ற பலரும் கலந்து கொண்டனர். அப்போது கார்த்தி மற்றும் சூர்யா மேடையில் ஏறியதும் ரசிகர்கள் பலரும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தினர். ரசிகர்களுடன் சேர்ந்து அதிதி ஷங்கரும் ரோலக்ஸ் என கத்தி கூச்சல் இட்டார். அதன் பின் அந்த வீடியோவை காண்பித்து ஒரு பேட்டியில் அதிதி ஷங்கரிடம் கேட்டதற்கு உண்மையில் என்னுடைய ஃபேவரட் கிரஷ் சூர்யா தான்.
அதனால்தான் ரசிகர்கள் கத்தியதும் என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் நானும் கத்தினை என கூறினார். இதை கேட்ட சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அடுத்து சூர்யாவுடன் இணைந்து அதிதி ஷங்கர் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.