நடிகை லைலாவுக்கு பிடித்த நடிகர் இவர் தானாம்.? லவ் ப்ரொபோஸ் பண்ண கூட ரெடியாக இருந்தாராம்..? வெளிவரும் உண்மை.

laila
laila

இந்திய சினிமா உலகில் பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லைலா தமிழில் இவர் தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஜாவனம், தில், தீனா, உன்னை நினைத்து, காமராசு, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த இவர் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் சூர்யா, அஜித், விக்ரம், பிரசாந்த், சரத்குமார் என்று வெவ்வேறு நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓடிகொண்டிருந்த இவருக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2006ம் ஆண்டு ஏழு வருடங்களாக காதலித்து வந்த ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் இருக்கின்றனர் திருமணம் முடித்த கையோடு அதன் பின் சினிமாவில் நடிப்பதை முழுவதுமாக தவிர்த்தார்.

41 வயதான லைலாவுக்கு இன்னும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை லைலாவுக்கு பிடித்த நடிகர் இவர்தான் அவர் மீது ரொம்ப கிரஷ் இருந்துள்ளது அவர் யார் தெரியுமா.. அந்த நடிகர் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூர்யா தானாம்.

முதலில் லைலா  லவ் ப்ரொபோஸ் பண்ண நினைத்தாராம் ஆனால் அது நடக்காமல் போய் விட்டதாம் ஏனென்றால் சூர்யாவின் காதலி ஜோதிகா கோபப்படுவார் என தெரிந்து ஒதுங்கி விட்டாராம். நடிகர் சூர்யாவும்,  லைலாவும்  இதுவரை இணைந்து பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, உன்னை நினைத்து போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.