அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரா.? மேடையில் உண்மையை போட்டு உடைத்த விக்னேஷ் சிவன்

ajith
ajith

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர் முதலில் போடா போடி என்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தன கடைசியாக இவர் எடுத்த காத்து வாக்குல இரண்டு காதல்..

திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ஏகே 62 திரைப்படத்தை இவர் தான் இயக்க உள்ளார் என தகவல்கள் எல்லாம் வெளிவந்தன ஆனால் இவர் சொன்ன ஸ்கிரிப்ட் சரிவர இல்லாததால் நடிகர் அஜித் மற்றும் லைகா நிறுவனம் இயக்குனர் விக்னேஷ் சிவனை உதறி தள்ளியது.

‘இதனை அடுத்து ஏகே 62 படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப் போகிறார். என தகவல்கள் பெரிய அளவில் வந்தாலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது விக்னேஷ் சிவனிடம் அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்க உள்ளார் என்பது குறித்து கேள்வி கேட்டனர்.

இதற்கு தயங்காமல் பதில் அளித்த விக்னேஷ் சிவன் மகிழ் திருமேனி கேரியரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அஜித் சாரை வைத்து  இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தை ஒரு ரசிகனாக நானும் பார்த்து ரசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன் என விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள் உங்க கையை விட்டு போன படத்தை பற்றி நீங்கள் பேசியது பெரிய விஷயம்  எனக் கூறி விக்னேஷ் சிவனுக்கு ஆறுதலாக கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இந்த தகவல் மேலும் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.