என்னுடைய படத்தில் நடித்த நடிகர்களிலேயே சிறந்த நடிகர் இவர்தான் – பாலா வெளிப்படை.!

director-bala
director-bala

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் மேலும் அந்த படங்கள் விருதுகளை அள்ளி குவித்துள்ளன. இதனாலையே இயக்குனர் பாலாவுக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளம் அவரது படத்தை பார்க்க இருக்கிறது.

இயக்குனர் பாலா இதுவரை சேது, நந்தா, பரதேசி, அவன் இவன், பிதாமகன், தாரை தப்பட்டை என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மேலும் இவர் இதுவரை பெரிய நடிகர்களை அதிகமாக பயன்படுத்தியது கிடையாது ஆனால் இவர்களது படத்தில் நடித்து பெரிய நடிகர்களாக பலர் உருமாறி உள்ளனர்.

அந்த வகையில் பாலா இதுவரை விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா, ஜிவி பிரகாஷ், சசிகுமார் போன்ற நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொருவரும் பாலா படத்தில் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து இப்போ முன்னணி நடிகர்களாக திகழ்கின்றனர்.

இப்பொழுது கூட பாலா சூர்யாவுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வணங்கான் என்னும் திரை படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து வெற்றி கரமாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் பாலா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார் அது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

அப்பொழுது உங்கள் இயக்கத்தில் நடித்த நடிகர்களில் யார் சிறந்த நடிகர் என கேள்வி எழுப்பினர் அதற்கு சற்றும் யோசிக்காத பாலா உடனே நான் தான் சிறந்த நடிகன். ஏன்னா உங்க எல்லோருக்கும் முன்னாடியும் நல்லவன் மாதிரி நடிக்கிறேன்ல அதனால நான் தான் பெரிய நடிகன் என்று கூறி அதிரவிட்டார்.