Nithya Menen : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை நித்யா மேனன். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கன்னட படத்தின் மூலம் ஹீரோயின்னாக என்ட்ரி கொடுத்து தற்பொழுது அனைத்து மொழிகளிலும் வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக தமிழில் இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி காணுகின்றன அந்த வகையில் ஓ காதல் கண்மணி, சைக்கோ, மெர்சல், திருச்சிற்றம்பலம் என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் இவர் பெரிதும் கவர்ச்சி காட்டி நடிப்பது இல்லை இருந்தாலும்..
இவருடைய திறமைக்கு ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர் இப்படிப்பட்ட நித்யா மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் தனக்கு நடந்த நல்லது கெட்டது என அனைத்தையும் பேசி உள்ளார். ஒரு நடிகர் படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப டார்ச்சர் செய்தார் என கூறினார் அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் பற்றி நடிகை நித்யா மேனன் பேசியது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அவர் சொன்னது என்னவென்றால்..
மெர்சல் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் நித்யா மேனனும், விஜயும் நடித்திருப்பார்கள். இவருடைய சீன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் பற்றிய அவர் சொன்னது என்னவென்றால்.. நடிகர் விஜய் மிகவும் அமைதியான நபர் என்று தெரிவித்துள்ளார் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்கள் வேலைகளில் அவர் அதிகமாக தலையிட மாட்டார்.
விஜய் அமைதியான நடிகர் என பாராட்டி உள்ளார் சில நடிகர்கள் அதிகமான கர்வத்துடன் காணப்படும் நிலையில் விஜய் எப்பொழுதும் இயல்பாக இருப்பார் என்று இதுபோன்ற நபர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது மிகவும் எளிமையானது என்றும் தெரிவித்துள்ளார்.