பொன்னியன் செல்வன் என்ற நாவலை படிப்பதற்கு பலரும் ஆசைப்படுவது வழக்கம்தான் அந்த வகையில் இந்த கதையை படித்த நமது இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இந்த கதையை திரைப்படமாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதை தன் கனவாகவே வைத்திருந்தார்.
அந்த வகையில் தனது கனவு திரைப்படத்தை தற்பொழுது படமாக்கிய இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இந்த திரைப்படத்தை படமாக எடுத்துள்ளார். பொதுவாக இந்த திரைப்படம் ஆனது சோழ மன்னர்களின் வரலாற்றை மிகவும் தென்னந் தெளிவாக கூறும் படி அமைந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் மற்றும் அருள் மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்திய தேவனாக நடிகர் கார்த்திக், குந்தவையாக நடிகை திரிஷா போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தின் டீசர் ஆனது நேற்று மிக பிரம்மாண்டமாக வெளிவந்த நிலையில் டீசர் வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள் ஆனால் இந்த விழாவில் நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய உடல்நல குறைவின் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
பொதுவாக பொன்னியின் செல்வன் கதையில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் வாசகர்கள் படித்துள்ளார்கள் அதில் சோழர் காலத்தில் அதிக அளவு இசைக்கருவிகளை பயன்படுத்தினார்கள் அதிலும் சோழ காலத்தில் இசைக்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் பல்வேறு இசை பாடல்கள் சோழ காலத்தில் வெளிவந்து கொண்டே இருந்தன இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்கள் சோழ காலத்து இசையை ஆண்டு ஆராய்ந்து அதற்கு தகுந்தார் போல் இசையமைத்துள்ளார்.
இவ்வாறு பழமை வாய்ந்த இந்த இசையை மீண்டும் நம் நாட்டு மக்களின் காதில் ஒலிக்கச் செய்த ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு பல்வேறு தரப்பு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படமானது கண்களுக்கு மட்டும் விருந்தாக அமையப் போவது கிடையாது செவிக்கு சிறந்த விருந்தாக அமையும் எனவும் மணிரத்தினம் அவர்கள் கூறியுள்ளார்.