பாக்ஸ் ஆபீஸில் இனிமேல் இவர்தான் கிங்க்..! உலகம் முழுவதும் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா..?

kamal-01
kamal-01

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் மிகப் பெரிய அளவு ஹிட்டான திரைப்படங்களை தமிழில் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நடிகர் கமலஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ் நாட்டை தாண்டி கேரளா, ஆந்திரா, வட மாநிலம் என அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீசில் பெருமளவு வசூலை பெற்றுள்ளது. அந்தவகையில் நடிகர் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு பிரபலங்களுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.

இவ்வாறு புகழ்பெற்ற நடிகர் கமலஹாசன் நடித்த இந்த விக்ரம் திரைப்படம் ஆனது தற்போது உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பற்றி பார்க்கலாம் அதாவது விக்ரம் திரைப்படமானது ரிலீஸ் ஆனவுடன் ஒருசில நாட்களிலேயே 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்து பெரிய சாதனை படைத்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் 13 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் 325 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் சமீபத்தில் எந்த ஒரு திரைப்படமும் திரையரங்கில் வெளியாகததன் காரணமாக இந்த திரைப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.