தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன் இவர் கடைசியாக எடுத்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் அள்ளியது இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் தீயாய் பரவின.
ஆனால் ஸ்கிரிப்ட்டை சொன்ன நேரத்தில் முடிக்காமல் இழுத்து அடித்தார் மேலும் அவர் சொன்ன கதை அந்த அளவிற்கு சிறப்பாக இல்லாமல் போனதால் அவர் ஏகே 62 ப்ராஜெக்ட்டில் இருந்து தூக்கி எறியப்பட்டார் இதனால் மனஉளச்சலுக்கு ஆளான விக்னேஷ் சிவன் முதலில் டிவிட்டர் பக்கத்தில் அஜித் இவரும் இருந்த புகைப்படத்தை நீக்கினார் பிறகு அவ்வப் பொழுது வித்தியாசமான பதிவுகளை போட்டு வந்தார்.
கடைசியாக கூட இவர் தோல்வியிலிருந்து தான் நாம் நிறைய பாடங்களை கற்றுக் கொள்கிறோம் என எல்லாம் பதிவிட்டு இருந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் விக்னேஷ் சிவன் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.. விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து வெளியேறியதை பெரிய அவமானமாக நினைக்கிறார்.
ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் அது ஒரு காமெடியாக தெரிகிறது அல்லது ஒரு பப்ளிசிட்டிக்காக தன் மீது ஒரு அனுதாபம் வருவதற்காக இதுபோன்று செய்கிறார் என தெரிகிறது ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பொழுது ஏற்பட்ட கஷ்டத்தை விட இது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டம் கிடையாது நயன்தாரா இல்லையென்றால் இன்று விக்னேஷ் சிவனை நாம் தேடுகிற அளவிற்கு தான் இருந்திருப்பார்.
நயன்தாரா என்ற ஒரு பிராண்ட் இருக்கும் பொழுது இவர் அப்படி என்ன கஷ்டப்பட்டு விட்டார் அப்படி என்ன நடந்து விட்டது என கூறி இருந்தார். தொடர்ந்து பேசிய அவர் விக்னேஷ் சிவனுக்கு AK 62 வாய்ப்பு நயன்தாரா மூலமாக தான் கிடைத்தது ஆனால் அதை கூட அலட்சியமாக எடுத்து கொண்டதால் அந்த ப்ராஜெட்டில் இருந்து வெளியே வர நேர்ந்தது ஆதலால் தவறு விக்னேஷ் சிவனுடையது தான் என கூறி இருந்தார்.