தமிழ் சினிமாவின் தொடர் ஹிட் படங்களை கொடுத்த வரம் தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இதில் இணைந்திருக்கும் நட்சத்திரம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் விஜயின் 65வது படத்திற்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி ஓடிக்கொண்டிருக்கும் விஜய்க்கு தற்போது உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களையும் தாண்டி வெள்ளித்திரையில் இவருடன் பயணிப்பவர்களும் தளபதி விஜய்யை பின்பற்றுவதோடு அவருடைய தீவிர ரசிகராக மாறுகின்றனர்.
சமிபத்தில் தளபதி விஜயின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகை வனிதா விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு எனது ஹீரோ சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி அசத்தினார்.
மேலும் அத்துடன் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்தார் அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் தற்போது வேகம் எடுத்துள்ளது தளபதி ரசிகர்களும் இச்செய்தியை கொண்டாடியும் வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.