தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தன்னை அறிமுகம் செய்துகொண்டு பின்னாட்களில் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் ஆரம்ப காலகட்டத்தில் அவ்வபொழுது பாடலுக்கு சினிமாவில் தலைகாட்டி நடனம் ஆடி வந்த நிலையில் திடீரென நடிகராக இவர் நடிக்க தொடங்கிய போதும் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொண்டு சிறப்பான ஒரு அந்தஸ்தை கொடுத்தனர்.
அதை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் சிறப்பாக தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ராகவா லாரன்ஸ் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் அவரே படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அதனால் தன்னை தானே சினிமாவுலகில் செதுக்கி கொண்டார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
இப்படி சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா உலகில் இவர் தான் எனக்கு நண்பர் என வெளிப்படையாக கூறி புதிதாக சம்பவமொன்று செய்துள்ளார் அவர் கூறியது யார் யாரை தெரியுமா.? ராகவா லாரன்ஸ் க்கு சினிமா உலகில் மிக நெருங்கிய நண்பராக வலம் வருபவர் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர் விஜய் தான்.
அதற்கு பதில் கேட்டால் தொகுப்பாளர் விஜய் மட்டும் தான் உங்களுக்கு சினிமா உலகில் நண்பரா என கேட்க அதற்கு ராகவா லாரன்ஸ் சொன்னது சினிமா உலகில் யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப முடியாது என்றும் அது மட்டுமல்லாமல் எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் முதல் போன் கால் வருவது விஜயிடம் இருந்துதான் என கூறினார்.
மேலும் நானும் அவரும் நெருங்கிய நண்பர் என்பதால் நான் விஜயை வைத்து படம் எடுக்க வேண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது அதே போல் விஜயும் என்னிடம் இந்த படத்திற்கு நீங்கள் நடன இயக்குனராக பணியாற்ற வேண்டும், இந்த படம் எடுக்க வேண்டுமென அவர் கூறியதும் கிடையாது எங்களது நட்பு ஆரம்ப கால கட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் நல்ல புரிதல் உடன் முன்னேறிக் கொண்டே செல்கிறது.
அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் வந்து நிற்ப்பேன் எனக்கு ஒன்று என்றால் அவர் முன்னாடி வந்து நிற்பார் இதுதான் எங்களுக்குள் இருக்கும் நட்பு. எங்களது சுய நலத்திற்காக நாங்கள் எதையும் பயன்படுத்தியது கிடையாது என ஓப்பனாக சொன்னார்.