நடிகை அமலாபால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் இதுவரை மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், பசங்க 2, அம்மா கணக்கு, ராட்சசன், ஆடை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியவர் இருப்பினும் அண்மை காலமாக நடிகை அமலா பாலுக்கு பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
அந்த வாய்ப்பை கைப்பற்ற அவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆடையின் அளவை குறித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு தான் பார்த்தார். ஆனால் எதுவுமே நடக்காமல் போனது இருப்பினும் அவரை நம்பி ஓரிரு பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்படித்தான் தற்பொழுது காடவர் திரைப்படத்தில் நடித்துள்ளார் .
இது வருகின்ற 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் இல் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அமலா பால் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் அப்படி ஒரு பேட்டி ஒன்றில் உங்களுடைய பேவரைட் ஆக்டர் யார் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதில் அளித்துள்ளது.
பேவரட் ஆக்டர் என்றால் அதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. பிடித்த ஆக்டர் யார் என்றால் விஜய் சேதுபதி அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இது போன்ற கதாபாத்திரம் தான் நடிக்க வேண்டும் பிசிக்கலா இருக்க வேண்டும் என வரைமுறைகளை தகர்த்து எறிந்தவர்.
அவர் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை தன்னம்பிக்கை இது எல்லாம் என்னை பிரமிக்க வைக்கிறது எனக்கு பிடித்த மாதிரி தான் பண்ணுவேன் என்ற தைரியம் அவருக்கு இருப்பது என்னை மிகவும் கவருகிறது அந்த தைரியத்திற்கு ஹேட்ஸ் அப் சொல்ல வேண்டும் என்று விஜய் சேதுபதி பற்றி புகழ்ந்து பேசி தள்ளி உள்ளார்.