தேடி வந்த வாய்ப்பை தவறவிட்ட முரட்டு ஹீரோ.! “லியோ” படத்தில் இவரும் நடித்திருக்க வேண்டியதாம் – வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

Leo
Leo

Leo : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவர்  லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து “லியோ” திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியுள்ளது. லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்..

அர்ஜுன், பிரியா ஆனந்த், திரிஷா, பிக் பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர் என பல திரைப்பட்டாளங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. அடுத்ததாக லியோ படக்குழு இசை வெளியீட்டு விழாவை பிரம்மண்டமாக நடந்த திட்டமிட்டு இருக்கிறது. படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில்  நடிகர் விஷால் லியோ திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது உண்மை தான். ஏன் நடிக்கவில்லை என்ற காரணத்தையும் சொல்லி உள்ளார். லியோ திரைப்படத்தின் கதையை லோகேஷ் கூறிய உடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் அந்த நேரத்தில் நான் வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

எனவே என்னால் லியோ படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. லோகேஷ் என்னிடம் கிட்டத்தட்ட  நான்கு மாதங்கள் லியோ படத்திற்காக ஒத்துக்க வேண்டும் என்று கூறியிருந்தார் நான் நாலு மாதம் எல்லாம் சரியாக வராது என்று அவரிடம் என்னுடைய நிலைமையை பற்றி கூறினேன்.

vishal
vishal

அவர் அதனை புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தார் இறுதியாக லோகேஷிடம் நான் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன் என கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள்  ஒரு நல்ல படத்தை மிஸ் செய்து விட்டாய் தலைவா எனக்கூறி கமெண்ட் அடித்து இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.