80, 90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்த நடிகர்கள் பலரும் இப்பொழுது உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் படங்களில் அப்பா, சித்தப்பா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருப்பினும் ஒரு சில நடிகர்கள் இப்பொழுதும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் மன்சூர் அலிகான் 90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர். குறிப்பாக இவர் ரஜினி, விஜயகாந்த் படங்களில் அவர்களுக்கு இணையாக வில்லன் ரோலில் மிரட்டினார் ஆனால் இப்பொழுது இவர் காமெடி கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் வில்லன் ரோல்களிலும் நடித்து ஓடுகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகானை கைதி படத்தில் நடிக்க வைக்க அதிக முயற்சி செய்தார் ஆனால் அது நடக்காமல் போனது இருப்பினும் மன்சூர் அலிகானை வைத்து ஒரு படம் எடுப்பேன் என லோகேஷ் கனகராஜ் சுற்றித்திரிந்து வருகிறார் இது இப்படி இருக்க மன்சூர் அலிகான் சமீபத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சியை ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்பொழுது அவர் சில விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் கைதி திரைப்படம் வெளிவந்த சமயத்தில் அனைவரும் அதைப் பற்றி என்னிடம் பெருமையாக பேசினார்கள் மேலும் லோகேஷ் பற்றியும் என்னிடம் அனைவரும் கூறினார்கள் ஆனால் இதுவரை நான் அவரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது. நான் மண்டையை போடுவதற்குள் அவர் இயக்கத்தில் நடித்த விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
கூடிய விரைவில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார். மன்சூர் அலிகான் தற்போது லோகேஷ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் லோகேஷும் பல பேட்டிகளில் மன்சூர் அலிகானை வைத்து படம் எடுப்பேன் என கூறினார். அது தளபதி 67 படத்தில் கூட நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.