தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் பைக் ரேஸ் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அது மட்டுமில்லாமல் அதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அப்படி இருக்கும் நிலையில் வருகிற 24-ஆம் தேதி வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் அதன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் வலிமை முன்பதிவும் நடைபெற்று வருகிறது வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என படக்குழு பெரிதாக நம்பி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்திலிருந்து தினம் தினம் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் அஜித் ஆக்ஷன் காட்சிகளை ப்ரோமோவாக வெளியிட்டார்கள் படக்குழு, அதுமட்டுமில்லாமல் பைக் ரேஸ் காட்சிகள் ப்ரோமோவும் வெளியானது. இந்த நிலையில் படத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் அஜித்தின் அப்பாவாக நடித்துள்ளவர் போட்டோவில் காட்டப்பட்டுள்ளார் அவர் யார் என்பதை தற்பொழுது ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
வலிமை திரைப்படத்தில் அஜித்தின் அப்பாவாக போட்டோவில் காட்டப்பட்டுள்லவர் வேறு யாரும் கிடையாது ஜெய்சங்கர் தான் இதனை தற்போது ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் இது குறித்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் யார் என்பதை குறிப்பிட்டு வருகிறார்கள்.
இதோ அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.