தமிழ் சினிமா உலகில் அதிக ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் ரசிகர்களுக்காகவே படங்களில் நடித்து வருகிறார் அந்த ரசிகர்களுக்கு ஏத்த மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக பெரிதும் இவரது படங்களில் ஆக்சன் காணப்படும். ஏன் அண்மையில் கூட நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம்.
முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருந்தது அதனை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த படமும் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்குவதால் இந்த படத்தில் சண்டைக் காட்சிக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. ak 61 இரண்டு கட்டப்பட்ட படிப்புகள் வெற்றிகாரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு புனேவில் தொடங்கப்பட இருக்கிறது..
அந்த படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என தெரிய வருகிறது. ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் வீரா, சஞ்சய் தத், சமுத்திரக்கனி, தெலுங்கு பட நடிகர் அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து ஓடுவதாக கூறப்படுகிறது.
ஏகே 61 படத்தை ஹச் வினோத் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் விக்ரம் படத்தை தொடர்ந்து ஏகே 61 திரைப்படம் பெரிய அளவில் பேசப்படும் என படத்தில் பணியாற்றியவர்களும், பார்த்தவர்களும் சொல்லி வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதைய அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது. நடிகர் அஜித்குமாருக்கு ரொம்பவும் பிடித்த ஹாலிவுட் நடிகர் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் லியானார்டோ டிகாப்ரியோ என்ற ஹாலிவுட் ஹீரோவின் தீவிர ரசிகராம் அஜித்.