வெள்ளித்திரையில் தத்துரூபமாக திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன் இவரது இயக்கத்தில் நிறைய திரைப்படங்கள் உருவாகி சாதனை படைத்துள்ளது அந்த வகையில் பார்த்தால் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக இவர் தனுஷை வைத்து இயக்கிய அனைத்து திரைப்படங்களும் இவருக்கு வெற்றியைத் தந்து விட்டது.மேலும் இவர் தற்போதும் ஒரு சில திரைப்படங்களை இயக்கி வருகிறார் அந்த வகையில் இவர் இயக்கி இவரே கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் சாணி காகிதம்.
இந்த திரைப்படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடித்து வருவது மட்டுமல்லாமல் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் முடிந்த கையோடு செல்வராகவன் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தை இயக்க ரெடியாக இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது.
அதுமட்டுமல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் இவர் எடுக்க போகிறார் என தகவல் கிடைத்துள்ளது இப்படி சினிமாவில் படு பிசியாக இருக்கும் இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் செல்வராகவன் பார்ப்பதற்கு பனியனுடன் மிகவும் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார் ஆள் அடையாளம் தெரியாமல் தாடி,மீசை என ஒட்டுமொத்தமாக மாறிவிட்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது எந்த திரைப்படத்திற்காக இப்படி தாடி மீசை வைத்துக் கொண்டு பயங்கரமாக இருக்கிறார் இவரைப் பார்த்தாலே பயமா இருக்குது எனக்கு கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் நானே வருவேன் திரைப்படத்தை இந்த மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்கி விடுவார் எனவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.