தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த்.தமிழ் திரை உலகில் கேப்டன் என்றால் நாம் நமகதிற்கு வருவது ஒரே நடிகர் விஜயகாந்த்.இவர் தனித்துவமான நடிப்பின் மூலம் பல கோடி இவர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவரது காலத்தில் கமல், ரஜினி போன்றவர்கள் மத்தியில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார். அவர்களை தட்டிக் தூக்கும் அளவிற்குதனது அதிரடி மற்றும் வசனத்தின் மூலம் நடுநடுங்க வைத்தார் விஜயகாந்த்.
இவர் 1979 ஆம் ஆண்டு அகல் விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து இனிக்கும் இளமை, நெஞ்சில் துணிவிருந்தால், மதுரை சூரன், வெற்றி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார் இதனையடுத்து அவர் மேலும் தனது நடிப்பை வெளிப்படுத்த அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
அந்த வகையில் இவர் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களான சொக்கத்தங்கம், நரசிம்மா, தர்மா, வாஞ்சிநாதன், வல்லரசு, வானத்தைப்போல, தவசி ,சத்ரியன் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் இவரை மிகப்பெரிய ஒரு வெற்றி நாயகனாக அறிமுகப்படுத்தியது.
சினிமாவில் மிகப்பெரிய நடிகராக திகழ்ந்த விஜயகாந்த் அவர்கள் தற்போது அரசியலில் தனது திசைதிருப்பி தற்போது அதிலும் வெற்றி பெற்று வருகிறார். விஜயகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார் ஆனால் எல்லாம் முறியடிக்க முடியும் ஆனால் ஒரே ஒரு சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்க முடியாத சாதனையை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒரு வருடத்தில் 18படங்களில் நடித்து அசத்தியுள்ளார் 1984 ஆம் ஆண்டு சராசரியாக 20 நாளைக்கு ஒரு படம் நடித்து இருந்தார்.அத்தகைய படங்கள் ஜனவரி 1 வைதேகி காத்திருந்தாள், இது எங்க பூமி, சத்தியம் நீயே, நாளை உனது நாள், சபாஷ், வீட்டுக்கு ஒரு கண்ணகி, மாமன் மச்சான், நல்ல நாள், வெள்ளை புறா ஒன்று, குழந்தை இயேசு, நூறாவது நாள், வேங்கையின் மைந்தன், வெற்றி, தீர்ப்பு என் கையில், மெட்ராஸ் வாத்தியார், மதுரை சூரன் போன்ற படங்கள் ஒரு வருடத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.
அதில் பல படங்கள் வெற்றி தோல்வியை சந்தித்தன அதிலும் குறிப்பாக நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.