பிரபல தொலைகாட்சியான சன் டிவி மூலம் பிரபலமானவர் தான் பணிமலர் இவர் இந்த தொலைக்காட்சியை தொடர்ந்து பாலிமர் புதியதலைமுறை என பல்வேறு செய்தி சேனல்களில் பணியாற்றி தன்னை புகழ் படுத்துக்கொண்டார். இவ்வாறு பிரபலமான நமது பனிமலர் சுமார் 10 ஆண்டுகளாக ஊடகத்தில் வேலை செய்து வருகிறார்.
அந்த வகையில் சமூக பிரச்சனைகள் பலவற்றிற்கும் குரல் கொடுப்பது மட்டுமில்லாமல் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் திருநெல்வேலியில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு பணி மலர் சென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவரிடம் நீங்கள் ஒரு நாள் இங்கு தங்குங்கள் உங்களுக்கு ஒரு லட்சம் தருகிறேன் என அவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்துள்ளார்கள். உடனே பனிமலர் இந்த நம்பரை பிளாக் செய்துவிட்டார்.
இதுபோன்ற கொடுமைகள் பல்வேறு பெண்களுக்கும் நடந்து கொண்டுதான் வருகிறது. தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் செய்த மெசேஜை புகைப்படம் மூலம் அவருடைய நம்பருடன் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பொதுவாக கோழையாக இருப்பவர்கள்தான் சமூகவலைத்தள பக்கத்தில் இதுபோன்ற போலியான நம்பர்களை வைத்துக் கொண்டு பெண்களுக்கு மெசேஜ் செய்வது வழக்கம். பொதுவாக பெண்கள் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் இது போன்ற செய்திகளை நம்பி ஏமாந்து விடக்கூடாது.
அதுமட்டுமில்லாமல் நாம் வளரும் போது இது போன்ற பிரச்சனைகள் பல்வேறு நடக்க நேரிடும் ஆனால் இவற்றை நாம் எதுவும் கண்டுகொள்ளாமல் தங்களுடைய பணியை சிறப்பாக செய்தால் இவர்கள் மட்டுமின்றி யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என பனிமலர் கூரியுள்ளார்.