கடந்த 18 ஆம் தேதி அன்று தொடங்கியது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகள் இதில் மூன்று டி20 போட்டிகளும் மூன்று ஒரு நாள் போட்டிகளும் இந்திய அணி விளையாடி இருந்தது. சமீபத்தில் தான் டி20 போட்டிக்கான தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அதனை அடுத்து 25ஆம் தேதி காலை 7:00 மணிக்கு தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தவானும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி20 போட்டிக்கான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா மூன்று தொடர்களிலும் களமிறங்கி விளையாடினார்.
அதில் 1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்திய அணி இருந்தாலும் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற கேள்வி கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மேல் கேள்வியாக இருந்தது. இதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா வெளியே இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன சொன்னாலும் அது எங்களுக்கு பாதிக்காது.
ஆனால் முதலில் இது என்னுடைய கிரிக்கெட் டீம் எப்பொழுதும் நானும் பயிற்சியாளரும் தான் அணி வீரர்களை தேர்வு செய்வோம் இன்னும் நிறைய போட்டிகள் நடைபெற உள்ளது அதனால் மற்ற வீரர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா. மேலும் சஞ்சீவ் சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் இந்த போட்டியில் இன்னும் அதிகமான போட்டிகள் நடைபெற இருக்கிறது நிச்சயம் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் ஆனால் இந்த டி20 மிக குறுகிய போட்டியாக மாறியது அதனால் அணியை உடனடியாக மாற்றம் செய்து அணில் உள்ள வீரர்களை குழப்பம் அடைய செய்ய நான் விரும்பவில்லை என்று நினைத்தேன் அதனால் தான் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா.