நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருந்து வருகிறார் இருப்பினும் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் சொல்லி கொள்ளும்படி பிரம்மாண்ட வெற்றியை ருசிக்கவில்லை அதனால் வெற்றிக்காக தற்போது ஏங்கி கொண்டிருக்கிறார்.
மகான் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இதில் முதலாவதாக கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் விட்ட இடத்தை விக்ரம் பிடிப்பார் என கூறப்படுகிறது.
விக்ரம் கோப்ரா திரைப்படத்தில் ஏழு விதமான லுக்கில் நடித்துள்ளார் ஒவ்வொன்றும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் விக்ரம் உடன் இணைந்து ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே எஸ் ரவிக்குமார், இர்பான் பதான், கனிகா மற்றும் பலர் நடித்து உள்ளனர் கோப்ரா திரைப்படத்தை அஜய் ஞானமுத்து வேற லெவலில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் கோப்ரா திரைப்படத்தில் நடித்ததற்காக ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதை வைத்து பார்க்கும் பொழுது இவர் இந்த படத்திற்காக சுமார் 6 லிருந்து 7 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.
நடிச்சது என்னவோ இரண்டு படம் தான் அதுக்குள்ளேயே ஆறு ஏழு கோடி சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. கே ஜி எஃப் 2 திரைப்படத்திற்காக ஸ்ரீநிதி ஷெட்டி வாங்கிய சம்பளம் 3 கோடி என கூறப்படுகிறது தற்போது தான் சம்பளத்தை உயர்த்தி அதிகமாக வாங்குகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.