“சின்னத்தம்பி” படத்தில் நடித்ததற்காக குஷ்பு – பிரபு வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

prabhu and kusboo
prabhu and kusboo

சினிமா உலகில் ஒரு சில ஜோடிகள் படத்தில் சேரும் பொழுது அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றியை ருசிக்கும். அந்தவகையில் எம்ஜிஆர் ஜெயலலிதா, ரஜினி மீனா, அஜித் நயன்தாரா இப்படி நாம் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த வகையில் 90 காலகட்டங்களில் பிரபு குஷ்பு இவர்களின் ஜோடி.

அப்பொழுது வெற்றி படங்களை கொடுத்து வந்துள்ளன ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ஜோடியாக இவர்கள் பார்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சின்னதம்பி இந்த படத்தில் பிரபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியானது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்திருப்பார் இந்த படத்தில் பிரபு ஒரு குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார் மேலும் பிரபு மற்றும் குஷ்பு வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக இருக்கும் இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

சின்னத்தம்பி திரைப்படம் குஷ்பு மற்றும் பிரபு கேரியரில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாக அப்பொழுது பார்க்கப்பட்டது இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக குஷ்பு மற்றும் பிரபு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்கையில் சிவாஜியின் மகன் பிரபு இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் சுமார் 11 லட்சம் என கூறப்படுகிறது நடிகை குஷ்பு இந்த திரைப்படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி அதற்காக அவருக்கு சம்பளமாக 4 லட்சம்  கொடுக்கப் பட்டதாக ஒரு தகவல்கள் வெளிவருகின்றன.