தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்ரம் சினிமா ஆரம்பத்தில் பல்வேறு தடைகளை சந்தித்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தனது திறமையை முழுவதையும் இறக்கி படத்தில் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார்.
அதுவும் இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு மிகப்பெரிய ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். ஆனால் அண்மைகாலமாக விக்ரம் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை பெறவில்லை அதிலிருந்து தன்னை மாற்றிக்கொள்ள..
சிறந்த இயக்குனருடன் கைகோர்த்து தற்போது நடித்து வருகிறார் இவர் கையில் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன இந்த படங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் விக்ரமின் சினிமா பயணம் விரைவில் உச்சத்தை தொடும் என தெரியவருகிறது.
விக்ரமை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரது மகனுக்கும் நல்ல எதிர்காலம் சினிமாவுலகில் இருக்கும் என தெரியவருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா பிரபலமும் தயாரிப்பாளருமான கே ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றில் விக்ரமை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்துள்ளார் அதுகுறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.
சினிமா உலகில் என்னதான் நடித்தாலும் அவர் பையில் இருந்து யாருக்காவது உதவி என்று பணம் கொடுத்து இருப்பானா ஒன்னும் பண்ண மாட்டான். சினிமானாலே பொது வாழ்க்கை தான் பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ வேண்டும் ஆனால் விக்ரம் யாருக்காவது ஏதாவது பண்ணி இருப்பானா இவன் பிள்ளையையும் சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டான் என சரமாரியாக பிரித்தெடுத்தார் கே ராஜன்.