36 ஆண்டுகளுக்கு முன் வெளியான “விக்ரம்” திரைப்படம் – அப்பொழுது அள்ளிய வசூல் மற்றும் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?

vikram-movie
vikram-movie

சினிமா உலகில் ஒரு சிலர் மட்டுமே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை ரசித்து அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது வழக்கம் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பு என்றால் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும் அதனால் தான் அவரது படங்களில் அவரது கதாபாத்திரம் மட்டும் தனியாக தெரியும் அது ரசிகர்களை கவர்ந்து விடுகின்றன.

மேலும் அவரது படங்களும் அசால்டாக வெற்றியை ருசித்து விடுமாம் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவராக கமல் இருந்து வருகிறார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே பல்வேறு அப்டேட்களை கொடுத்து அசத்தி வருகிறது இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பத்தல பத்தல பாடல், டிரைலர் ஆகிய அனைத்தும் வெறித்தனமாக இருந்து வந்துள்ளது.

தற்போது படக்குழு போஸ்ட் பிரமோஷன் நிகழ்ச்சிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்தும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் 2022ம் ஆண்டில் ஜூன் 3 ஆம் தேதி வெளிவர வருகிறது ஆனால் விக்ரம் பெயரில் கமல் நடிப்பில் 1986-ம் ஆண்டும் ஒரு படம் வெளிவந்துள்ளது. ‘

அந்த படத்தின் தொடர்ச்சி இது இல்லை என்றாலும் படத்தின் பெயர் ஒன்றாகவே இருக்கிறது. 1986 இல் உருவான விக்ரம் படம் அப்பொழுது ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது படம் ரிலீஸாகி 8 கோடி வரை வசூலித்து சாதனைப் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.