கெடா மீசை வைத்து கெட்டப்பையே மாற்றிக்கொண்ட நடிகர் அருள்நிதி – லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

arul-nithi-

தமிழ் சினிமா உலகில் தனது பயணத்தை தொடங்கியதிலிருந்து இப்போதுவரையிலும் மிக வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. முதலில் இவர் வம்சம் எனும் திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன்பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்.

அந்த வகையில் மௌனகுரு, டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களத்தில் சந்திப்போம், K – 13 போன்ற பல படங்களில் நடித்து இப்பொழுது கூட d-block, டைரி, தேஜாவு போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய படத்தில் அருள்நிதி கமிட் ஆகியுள்ளார்.

ராட்சசி படத்தை இயக்கிய கௌதம் ராஜ். தற்போது ஒரு புதிய கதையை உருவாக்கியுள்ளார் அந்த கதையில் அருள்நிதி நடிக்க ஆர்வம் காட்டி இருக்கிறார். அவர்கள் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகும் என தெரியவருகிறது.

ஏனென்றால் அருள்நிதி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய கெட்டப்பில் இருக்கிறார். கடா மீசை வைத்து ஆளே மாறி போயி ஒரு வீரம் நிறைந்த ஆளாக இந்த படத்தில் நடிப்பார் என தெரியவருகிறது புகைப்படத்தை பார்க்கும் பொழுது அப்படி தான் நமக்கு தோன்றுகிறது.

நிச்சயம் கௌதம் ராஜ் மற்றும் அருள் நிதி இணையும் இந்தப் படம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது அருள்நிதியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

arul nithi
arul nithi
arul nithi
arul nithi