“விக்ரம்” படத்தில் நடித்துள்ளாரா.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – வெளியான புகைப்படத்தால் பரபரப்பு.?

vikram movie
vikram movie

உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்  லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தான்  விக்ரம். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது கமலுடன் கைகோர்த்து  விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா மற்றும் பலர் டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படம் வருகின்ற  ஜூன் 3  ஆம் தேதி உலக அளவில் படம் ரிலீசாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுக்க படக்குழு தொடர்ந்து பல சிறப்பான அப்டேட்டுகளை கொடுத்து அசத்தி உள்ளது.  படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பத்தல பத்தல பாடல் போன்றவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று..

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேரு திரையரங்கில் நடந்தது இதில் சிறப்பு விருந்தினர்களாக பா ரஞ்சித், சிம்பு, காளிதாஸ் ஜெயராஜ் மற்றும் பலர் நட்சத்திர பட்டாளங்கள் வந்து கலந்து கொண்டனர். படத்தின் ட்ரைலரும் ரிலீஸ் செய்யப்பட்டது அப்போதிலிருந்து  யூடியூப்பில் விக்ரம் படத்தின் டிரைலரை அதிக பார்வையாளர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்ததாக இருப்பதால் இந்த படத்தில் அதிகம் ஆக்சன்  இருக்கும் என தெரியவருகிறது விக்ரம் படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில்  அதை டிரெய்லரில் கூட பார்க்க முடிந்தது. ஒரு காட்சியில் நடிகர் சூர்யா வந்து போகிறார் அதேபோல் இந்த படத்தின் மற்றுமொரு பிரபலமும் நடித்துள்ளார்.

அந்த பிரபலம் வேறு யாருமல்ல லோகேஷ் கனகராஜ் தான். மாஸ்டர் படத்தில் எப்படி கடைசியாக லோகேஷ் வந்து போனாரோ அதே போல இந்த படத்திலும் லோகேஷ் கனகராஜ் ஒரு சின்ன சீனில் வந்து போயுள்ளார் என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ட்ரைலரில் பற்றி எரியும் நெருப்பில் லோகேஷ் கனகராஜ் வந்து போயுள்ளனர் அதை ரசிகர்கள் வட்டம் போட்டு கண்டுபிடித்து காட்டி உள்ளனர்.  இதோ நீங்களே பாருங்கள்.

lokesh
lokesh