நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திலிருந்து hd புகைப்படங்களை ஜி ஸ்டூடியோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் நடிகர்தான் அஜித்குமார் இவர் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி திரையரங்கில் வெளியாக காத்திருக்கிறது.
இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படத்திலிருந்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில். கடந்த மாதம் துணிவு படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருந்தது.
அந்த வகையில் சமீபத்தில் துணிவு திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி youtube- ல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. மேலும் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ்க்கு இன்னும் குறுகிய காலகட்டங்கள் இருக்கும் நிலையில் தற்போது பட குழுவினர் தீவிரமாக பிரமோஷன் செய்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து துணிவு பட குழுவினர் சமீபத்தில் வெளிநாடுகளில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஸ்கை டைவிங் மூலம் பிரமோஷன் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளை செய்து வரும் துணிவு படத்தின் படக்குழுவினர் தற்போது துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள சில காட்சிகளை hd புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் படத்தை இதுவரைக்கும் எந்த ஒரு பட குழுவினரும் பிரமோஷன் செய்ததில்லை ஆனால் துணிவு பட குழுவினர் எல்லாத்தையும் ஒரே நொடியில் தவிடு பொடியாக்கி விட்டது அந்த வகையில் தற்போது துணிவு படக்குழு இறங்கி ப்ரோமோஷன் செய்து வருகிறது.
இதோ துணிவு படத்தின் hd புகைப்படங்கள்..