தளபதி விஜய் 1984 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் அவர்களின் ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் தன்னுடைய பத்து வயதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் பேசும் இன்டர்வல் பிளாக் வசனத்தைப் பேசி காட்டிய தனது தந்தையிடம் வாய்ப்பு கேட்டார் விஜய், இன்று தளபதியாய் உயர்ந்து நிற்கும் விஜய் தன்னுடைய உழைப்பால் தான் இந்த நிலையை அடைந்தார். மிகப்பெரிய இயக்குனரின் மகன் ஆரம்ப காலத்தில் இவர் பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கடந்துதான் வந்தார்.
தனக்கு வந்த விமர்சனங்களை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற வெறியில் நடித்து வந்தார், பல வெற்றிக்குப் பின்பு ஒரு ஆண் அல்லது பெண் இருப்பது போல் என்னுடைய வெற்றிக்கு பின்பு பல அவமானங்கள் இருக்கிறது என அவரே மேடையில் பலமுறை கூறியுள்ளார்.
சிறந்த திறமையும் மக்களின் அன்பும் இருந்தாலே கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டியவர் விஜய், இதுவரை தளபதி விஜய் 64 திரைப்படங்களை கடந்து வந்துள்ளார், அதேபோல் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இதயத்தில் இடம் கொடுத்துள்ளார்கள். ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் அந்த மகா நடிகனுக்கு இன்று 46 வது பிறந்தநாள் அதனால் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
Happy birthday @actorvijay anna ?#HBDTHALAPATHYVijay https://t.co/eHNK0TC5CU
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2020
கடந்த ஒரு வாரமாகவே இணையதளத்தில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள் இந்த நிலையில் பல பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Happy birthday Nanba @actorvijay pic.twitter.com/u3U1QhlWTW
— Raghava Lawrence (@offl_Lawrence) June 21, 2020