இனம் இனத்தோடு தான் சேரும்… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

robert-master

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் ஒரு முக்கிய நபரை சந்தித்திருக்கிறார் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

21 போட்டியாளர்களுடன் மிகவும் கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் இதுவரையிலும் ஏழு பேர் வெளியாகி இருக்கிறார்கள் அந்த வகையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஸினி ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதுவரையிலும் சரியாக விளையாடியதே கிடையாது ஓரிடத்தில் அமர்வு கொண்டு மற்றவர்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் முக்கியமாக ரட்சிதாவிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் பலரும் இதனை விமர்சனம் செய்து வந்தார்கள் ஏனென்றால் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை கையைப் பிடித்து இழுப்பது, முத்தம் கேட்பது, கட்டிப்பிடிக்க வா என கூறுவது என பல சில்மிஷன் வேலைகளை செய்து வந்தார்.

robert mastres 1
robert mastres 1

எனவே இவரை உடனே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேற்றியுள்ளார்கள். இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் தன்னுடைய அப்பா ஞாபகம் இருப்பதாக சொல்லி வந்த நிலையில் தன்னுடைய அப்பா, அம்மா இருவரையும் சந்தித்துள்ளார். அவர்கள் இருவரும் ராபர்ட் மாஸ்டருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

robert mastre

மேலும் இதனைத் தொடர்ந்து வெளியான முதல் நாளே அசல் கோளாறு நேரில் சென்று சந்தித்துள்ளார். அசல் கோளாறு தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பல பெண்களை தொட்டி தடவி பேசி வருவதை வழக்கமாக வைத்திருந்தார் இதன் காரணமாக இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் அசல் கோளாறை சந்தித்துள்ளார் இது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகிறார்கள்.