தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் வடிவேலு இவர் 90 காலகட்டத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து கலக்கி இருந்தார். இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
மேலும் தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்களான விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் பிறகு சில காலங்களாக இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை ஏனென்றால் நடிகர் வடிவேலு செய்த சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தியது அதோட மட்டுமல்லாமல் எப்பொழுதும் தான் என ஆணவத்துடன் இருந்து வந்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.
எனவே சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பிறகு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் சமீப காலங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு வெளியான திரைப்படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ்.
இந்தத் திரைப்படம் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரீதியாகவும் பெரும் தோல்வியினை சந்தித்தது அதற்கு முக்கிய காரணம் இவருடைய திரைப்படம் வெளியான நேரத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்த கட்டா குஸ்தி திரைப்படமும் வெளிவந்தது எனவே வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தை விட விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு செய்த காரியத்தை பற்றி வலைப்பேச்சு சேனல் கூறியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் ஆனந்தராஜியின் ஏராளமான காட்சிகள் இடம் பெற்று இருந்ததாம் இதனைப் பார்த்துவிட்டு அனைவரும் அப்படி ஒரு சிரிப்பு சிரித்தார்களாம். ஆனால் வடிவேலு படத்தைப் பார்த்தவுடன் கடுப்பாகி விட்டாராம் என்னது நம்ம படத்துல ஆனந்தராஜ்க்கு இவ்வளவு காட்சிகளாக என ஆனந்தராஜ் தெரியாமல் அவர் நடித்திருந்த நிறைய சீன்களை விட்டு விட்டாராம்.