17 வயதில் சுருதிஹாசன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! ஆளே அடையாளமே தெரியலையே எனக் கூறும் ரசிகர்கள்..

sruthi-hassan

வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை சுருதிஹாசன். நடிகர் கமலஹாசனின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றுள்ளார். அந்த வகையில் தற்பொழுது பாடவக்கராகவும் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலங்களாக தமிழில் பெரிதாக திரைப்படங்கள் நடிக்காமல் இருந்து வருகிறார். ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அதாவது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமையல், பிரெண்ட்ஸ் போன்ற விஷயங்கள் பற்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதோட மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் கலந்துரையாடி வரும் இவர் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுருதிஹாசன் 17 வயதில் இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

நடிகை ஸ்ருதிஹாசன் ஆறு வயதில் பாடகராக சினிமாவிற்கு அறிமுகமானார் அந்த வகையில் தன்னுடைய தந்தை நடித்திருந்த தேவர்மகன் படத்தில் முதல் பாடலை பாடியிருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் பாடத் தொடங்கிய இவர் பிறகு ஹிந்தி, தமிழ் என தொடர்ந்து ஏராளமான மொழிகளிலும் பாடகராக அறிமுகமானார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு கடந்த 2000ஆம் ஆண்டு ஹே ராம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

shrutzhaasanfan
shrutzhaasanfan

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வினை அடைந்தது இப்படிப்பட்ட நிலையில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு சுருதிஹாசன் இசையமைத்து இருந்தார் இதன் மூலம் பிரபலமடைந்த இவர் இந்த படத்திற்கு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருந்துள்ளார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் பொழுது சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் இவருக்கு முதன்முறையாக கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை கிடைத்துள்ளது.

இந்த படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்பதற்கான விருதை பெற்றார் பிறகு 3 பூஜை, புலி, வேதாளம் என தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா பல நடிகர்களும் ஜோடியாக நடித்தார் மேலும் இவர் தமிழனை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.