தமிழ் சினிமாவில் அனைவராலும் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்த ஒரு சில திரைப்படங்களை தோல்வி திரைப்படமாக கொடுத்திருந்தாலும் தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு தன்னுடைய சிறந்த நடிப்பால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படி இவர் வில்லனாக நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சந்தானம் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கையில் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும் கதாநாயகனாகவும் மாறி மாறி நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ரொமாண்டிக் ஹீரோவாகவும் அசத்தி வருகிறார் அப்படி இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தனது அம்மாவுடன் ஒரு திறப்பு விழாவிற்கு சென்றபோது அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.