தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கூட்டணி அமைத்து இப்போ தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது வாரிசு படம் அடுத்த வருடம் பொங்களை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை விஜய் வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து தனது 67 வது திரைப்படத்தில் நடிக்க விஜய்..
திட்டமிட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் விஜய் வந்தால் ஷூட்டிங் எடுக்க ரெடியாக இருக்கிறார். தளபதி 67 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பல நட்சத்திர நடிகர் நடிகைகளை நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டு வருகிறாராம்.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது தளபதி விஜய் சினிமா உலகில் ஒரு ஹீரோ என்கின்ற அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளாமல் அதையும் தாண்டி அவர் ஒரு பாடகராகவும் ஓடிக்கொண்டிருக்கிறார் ஆம் அவரது படங்களிலேயே பல பாடல்களுக்கு பாடி இருக்கிறார்.
ஆனால் மேடை என்று வந்துவிட்டால் பெரிதும் நடனம் தான் ஆடுவார் ஆனால் பல வருடங்களுக்கு முன்பாக தளபதி விஜய் ஒரு மேடையில் பாடியும் இருக்கிறார். அதுவும் என்னை தாலாட்ட வருவாளா என்ற பாடலை செம்ம அருமையாக பாடி ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டளை வாங்கி இருக்கிறார் நடிகர் விஜய் இதோ அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்..
Vijay na ❤️🫣 pic.twitter.com/qBK1ET2JVF
— . (@itz_PumA_57) October 28, 2022