வைகைப்புயல் வடிவேலுவின் அம்மாவை நீங்கள் பார்த்து உள்ளீர்களா.! இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

vadivelu

சினிமா உலகில் ஒரு நடிகர் அடியெடுத்து வைக்கும் போது யாரையாவது ஒருவரை ரோல் மாடலாக வைத்து கொண்டு இருப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் நடிகர் வடிவேலுவை ரோல் மாடலாக வைத்து பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். இப்போது வரும்காமெடியன்கள் பலரும் வடிவேலுவின் சாயலில்  நடிக்கவும் தொடங்கி உள்ளனர்.

அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனது திறமையை காட்டி உள்ளார். வடிவேலு 90 காலகட்டங்களில் இருந்து சினிமாவில் பயணிக்கும் வடிவேலு இதுவரை பல்வேறு  டாப் நட்சத்திரங்களுடன் நடித்துள்ளாராம். ராஜ்கிரன தொடங்கி கமல், ரஜினி, அஜித் விஜய் தற்பொழுது இருக்கும் இளம் ஹீரோக்கள் வரை நடித்துள்ளார் வடிவேலு.

போதாத குறைக்கு காமெடியன் என்ற அந்தஸ்தையும் தாண்டி சினிமா உலகில் ஹீரோவாகவும் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இப்படி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தாலும் இடையில் பல்வேறு பிரச்சினைகளை அவர் சந்தித்து உள்ளார்.

அதனால் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு மீண்டும் சினிமா உலகில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முதலில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அதன் பின் பல்வேறு நடிகர்களின் படங்களில் இவர் காமெடியகவும் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் வடிவேலு தனது அம்மா வைத்தீஸ்வரி அவர்களுடன் இணைந்து வடிவேலு எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர் மேலும் அந்த புகைப்படம் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

vadivelu
vadivelu